ஏடிஸ் விவகாரம்: பந்திங் சந்தை 3 நாட்களுக்கு மூடப்படும் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

ஏடிஸ் விவகாரம்: பந்திங் சந்தை 3 நாட்களுக்கு மூடப்படும்

 

பந்திங், ஏப்.5-

கோலலங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகே எல்) துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரையில் பந்திங் பொது சந்தை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏடிஸ் கொசுக்கள் பரவலைத் தடுப்பதற்காக இச்சந்தையின் கட்டடம் முழுவதும் சுத்தப்படுத்தப்படவிருப்பதாக அதன் நிறுவன தொடர்பு பிரிவு அதிகாரி முகமது கமால் முகமது ரம்லான் கூறினார்.

இக்கட்டட வளாகத்தில் ஏடிஸ் கொசுக்கள் வளர்வதற்கான சாத்தியம் உள்ள பல பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அதைத் தொடர்ந்து இச்சந்தையில் வணிகம் புரியும் வர்த்தகர்களும் இந்த துப்புரவு நடவடிக்கையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, அவ்வணிகர்களின் வாழ்வாதாரமாக இச்சந்தை திகழ்வதையும் அவர் நினைவுபடுத்தினார்.

RELATED NEWS

Prev
Next