ஏப்ரல் 7 இல் முதலாவது சிலாங்கூர் கல்விப் பயணத் தொடர் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

ஏப்ரல் 7 இல் முதலாவது சிலாங்கூர் கல்விப் பயணத் தொடர்

ஷா ஆலம், ஏப்.1-

சிலாங்கூரின் வட பகுதியில் 2019 சிலாங்கூர் கல்விப் பயணத்தின் முதல் தொடர் இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி உயர்கல்விக் கழகங்களில் தங்கள் கல்விப் பயணத்தை தொடர விரும்பும் எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் மற்றும் அதற்கு ஈடானத் தகுதிகளைக் கொண்டிருக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம் என்று முகநூல் வாயிலாக வெளியிடப்பட்ட அறிக்கை கூறியது.


மந்திரி பெசார் அமிருடின் ஷாரியுடன் கல்வி நட்சத்திரம் கெப்ரிஸ் அரிஸ் மற்றும் புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவாரியா ஜூல்கிஃப்ளி ஆகியோரும் இந்நிகழ்ச்சிக்கு வருகை அளிப்பர் என்றும் அவ்வறிக்கை தெரிவித்தது.

மாணவர்களுக்கு விரிவான விளக்கங்களை அளிக்க மாநில கல்வி இலாகா, சிலாங்கூர் ஜக்காட் வாரியம், சிலாங்கூர் அறவாரியம், தேசிய உயர்கல்வி கடனுதவிக் கழகம் (பிடிபிடி போன்ற அமைப்புகளின் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

RELATED NEWS

Prev
Next