சிறப்பு விருதளிப்பு : ஷா ஆலாம் மாநகர் மன்றம் அறிமுகம் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

Norway

Wartawan

kgsekar

சிறப்பு விருதளிப்பு : ஷா ஆலாம் மாநகர் மன்றம் அறிமுகம்

ஷா ஆலாம், ஏப். 25-

சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி வரும் தனது ஊழியர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஷா ஆலாம் மாநகர் மன்றம்(எம்பிஎஸ்ஏ) சிறந்த சேவைக்கான அங்கீகார விருதை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறந்த சேவைக்கான அங்கீகாரம் (ஏபிசி) வழங்கப்படாவிட்டாலும் கூட சிறந்த முறையில் சேவையாற்றும் ஊழியர்கள் சிறப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த விருது அறிமுகப்படுத்தப்படுவதாக துணை டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் தெரிவித்தார்.


“உற்பத்தி மற்றும் சேவைத் திறனை அதிகரிக்கும் வகையில் எம்பிஎஸ்ஏ தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பை என்றும் மதித்து வருகிறது”.

” அவ்வகையில் எம்பிஎஸ்ஏ 25 ஊழியர்களுக்கு சிறப்பு அங்கீகார சான்றிதழ் வழங்கியது. இவர்கள் 400 வெள்ளி பிஎஸ்என் பிரிமிய சேமிப்பு சான்றிதழையும் பெற்றனர்” என்று இங்கு 2018 எம்பிஎஸ்ஏ ஏபிசி நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

RELATED NEWS

Prev
Next