தண்ணீரை சேமிப்போம்! சபாக் பெர்ணத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

தண்ணீரை சேமிப்போம்! சபாக் பெர்ணத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

சபாக் பெர்ணம், ஏப்.5-

சுங்கை பஞ்சாங் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஆயர் சிலாங்கூருடன் சேர்ந்து தண்ணீர் சேமிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி பாலாய் ராயா கம்போங் ஹலா சாரா பாரு பாரிட்டில் நடைபெற்றது.


தண்ணீர் சேமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கற்றுத் தரவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுங்கை பஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமது இம்ரான் தம்ரின் கூறினார்.

சிலாங்கூரில் அதிகளவு தண்ணீர் பயன்படுத்தும் பகுதிகளில் ஒன்றாக சபாக் பெர்ணம் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தண்ணீர் குழாயைத் திறந்தபடியே பல் துலக்குவது, குளிப்பது போன்ற நடவடிக்கைகள் தண்ணீரை விரயமாக்கும் நடவடிக்கைகளின் ஒன்றாகும் என்பதை பயனீட்டாளர்களுக்கு உணர்த்துவது இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என்றார் அவர்.

RELATED NEWS

Prev
Next