தினசரி பயனீட்டைக் குறைக்க ஆயர் சிலாங்கூர் இலக்கு | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

தினசரி பயனீட்டைக் குறைக்க ஆயர் சிலாங்கூர் இலக்கு

 

சபாக் பெர்ணம், ஏப்.5-

சுங்கை பஞ்சாங் பகுதி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரின் அளவைக் குறைக்க சிலாங்கூர் குடிநீர் நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) இலக்கு கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


தற்போது நாளொன்றுக்கு தனிநபர் ஒருவர் 214 எல்சிடி தண்ணீரைப் பயன்படுத்துவதை 2048ஆம் ஆண்டுக்குள் 180 எல்சிடியாக குறைக்க தங்கள் தரப்பு உறுதிபூண்டுள்ளதாக குடிநீர் சேமிப்பு மற்றும் தரக் கண்காணிப்பு பிரிவின் முதல் நிலை உதவித் தலைவர் வாசன் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சிலாங்கூரில் வசிக்கும் குடும்பத்தில் உள்ள ஒரு நபர் 2016ஆம் ஆண்டு நிலவரப்படி சராசரியாக 234 எல்சிடி தண்ணீர் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது என்றார் அவர்.

“இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 222 எல்சிடியாக குறைக்கப்பட்டது.” என்று குடிநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசியபோது ராமச்சந்திரன் தெரிவித்தார்.

RELATED NEWS

Prev
Next