தொழிலாளர் பேருந்து விபத்து: 11 பேர் பலி | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

தொழிலாளர் பேருந்து விபத்து: 11 பேர் பலி

சிப்பாங், ஏப்.8-

இங்குள்ள மாஸ் கார்கோ பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் தொழிலாளர் பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்களில் 11 பேர் மரணமடைந்தனர். மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு 11.11 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மட்டுமே மலேசியராவார். இதர 10 பேரும் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களாவர் என்று கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜுல்கிப்ளி அடாம்ஷா கூறினார்.


அவர்களில் ஒன்பது பேர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணமடைந்த வேளையில், மற்ற இருவரும் செர்டாங் மற்றும் புத்ரா ஜெயா மருத்துமனையில் மரணமுற்றதாக அவர் சொன்னார்.

20 மீட்டர் ஆழம் கொண்ட கால்வாயில் விழுந்த அந்தப் பேருந்து மொத்தம் 43 அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை மாஸ் கார்கோவிலிருந்து நீலாயில் உள்ள தொழிலாளர்கள் விடுதிக்கு ஏற்றிச் சென்றதாக தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக ஜூல்கிப்ளி தெரிவித்தார்.

 

RELATED NEWS

Prev
Next