பெல்டாவின் கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் -டத்தோஸ்ரீ அஸ்மின் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

பெல்டாவின் கடன் மறுசீரமைப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் -டத்தோஸ்ரீ அஸ்மின்

கோலாலம்பூர், ஏப். 10-

கூட்டுறவு நில மேம்பாட்டு வாரியம் (பெல்டா) நிதி நிறுவனங்களுடனான தனது கடனை மறுசீரமைப்பதற்கு ஏதுவாக அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பெல்டாவின் உருமாற்று திட்டத்திற்கு ஏற்ப புதிய மற்றும் நீடித்த நிதி முறையை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றே இந்த உத்தரவாதம் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார். இது பெல்டாவின் கடன் சுமையைக் குறைக்க உதவும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


“பெல்டாவின் கடனை மறுசீரமைப்பு செய்யத் தவறினால் இந்நிறுவனம் 2019 ஆம் ஆண்டு 2.5பில்லியன் வெள்ளி கடன் மற்றும் வட்டியைச் செலுத்த நேரிடும்” என்று மக்களவையில் பெல்டா வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மட்டும் பெல்டா நிதி நிறுவனங்களுக்கு 1.4 பில்லியன் வெள்ளி கடன் மற்றும் வட்டியைச் செலுத்த நேரிட்டதாக அஸ்மின் கூறினார்.

மலேசிய பங்கு பரிவர்த்தனை சந்தையில் இடம் பெறும் வகையில் பெல்டா குலோபல் வென்சர்ஸ் நிறுவனத்துடன் நில அடகு ஒப்பந்தத்தில் பெல்டா கையெழுத்திட்டதைத் தொடர்ந்து வருமானம் குறைந்ததோடு இதன் ரொக்கப் புழக்கத்திலும் நிதிப் பிரச்னையை எதிர்நோக்குவதற்குக் காரணமானது.

 

RELATED NEWS

Prev
Next