மந்திரி பெசார் : ஊராட்சி மன்றம் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் உயர்பதவிகளில் மாற்றம் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

மந்திரி பெசார் : ஊராட்சி மன்றம் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் உயர்பதவிகளில் மாற்றம்

ஷா ஆலம், ஏப்.4-

மக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் ஊராட்சி மன்றம் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் உயர்மட்ட பதவிகளில் மாநில அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

2025ஆம் ஆண்டுக்குள் விவேக மாநில அந்தஸ்தை சிலாங்கூர் அடைவதற்கும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் இந்த நியமனங்கள் ஆக்கப்பூர்வ பலனை அளிக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.


அவற்றுள் ஒன்று, பெட்டாலிங் ஜெயாவின் முன்னாள் மேயர் டத்தோ முகமது அஸிஸி முகமது ஜெயின் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், காஜாங் நகராண்மைக் கழகத்தின் முன்னாள் தலைவர் டத்தோ சாயுத்தி பாக்கார் பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடப்புக்கு வந்ததாக அவ்வறிக்கை கூறியது.

RELATED NEWS

Prev
Next