மேலும் 5 வர்த்தக பங்காளி நிறுவனங்களை பிளஸ் அறிவித்தது | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

மேலும் 5 வர்த்தக பங்காளி நிறுவனங்களை பிளஸ் அறிவித்தது

செத்தியா ஆலாம், ஏப்.18-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் ஓய்வு பகுதிகளின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஐந்து வர்த்தக பங்காளி நிறுவனங்களை பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சூஷி கிங், மை லக்சா, போன் 900 கஃபே, டெய்லி ஃபிரேஷ் மற்றும் ஃபேமிலி மார்ட் ஆகிய ஐந்து நிறுவனங்களே அவை என்று பிளஸ் தெரிவித்தது.


பிளஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டத்தோ அஸ்மான் இஸ்மாயில் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்ட வர்த்தக பங்காளி உடன்படிக்கை கையெழுத்திடும் நிகழ்ச்சி ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது.

ஒட்டு மொத்தமாக, 450க்கும் மேற்பட்ட வர்த்தக பங்காளிகளும் 20 பிரபல உணவு நிறுவனங்களும் பிளஸ் நிறுவனத்தின் நெடுஞ்சாலைகளின் ஓய்வு பகுதிகளில் இயங்கி வருகின்றன என்று பிளஸ் தெரிவித்தது.

RELATED NEWS

Prev
Next