NATIONAL

ஆவணம் இல்லாத 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள் பள்ளிகளில் பதிவு

புத்ரா ஜெயா, ஏப்.30:

இவ்வாண்டு தொடக்கத்தில் முறையான ஆவணங்களின்றி மொத்தம் 2,635 சிறார்கள் பள்ளிப் படிப்பை தொடங்குவதற்கு உதவி நல்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கம் எடுத்த சரியான நடவடிக்கையால், சம்பந்தப்பட்ட சிறார்களின் எதிர்காலம் உறுதி செய்யப்பட்டதோடு அவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்குவதிலிருந்தும் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலேக் கூறினார்.

“இதுநாள் வரையில் அவர்கள் கவனிக்கப்படாமல் இருந்தனர். இவ்வாறு அவர்கள் கைவிடப்பட்டால் நிச்சயம் அவர்கள் சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் அவர்கள் சமூகத்திற்கு பிரச்னைகளாக உருவெடுப்பர்” என்றார் அவர்.

“சம்பந்தப்பட்ட மாணவர்களை பள்ளியில் பதிவு செய்வதற்கான சரிசெய்யும் நடவடிக்கையில் அமைச்சு ஈடுபடும். அதே வேளையில், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ஆவணங்கள் கிடைப்பதற்கு பள்ளித் தரப்பினர் உதவுவர்” என்று நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் மஸ்லீ தெரிவித்தார்.


Pengarang :