NATIONAL

இக்குவானிமிட்டி, ரிம 514 மில்லியனுக்கு கெந்திங் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது

கோலா லம்பூர், ஏப்ரல் 3:

ஆடம்பரப் பயணக் கப்பல், இக்குவானிமிட்டி, 126 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (RM514 மில்லியன்) கெந்திங் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது என்று அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் இன்று தெரிவித்தது.

“கோலாலம்பூர் கடற்படை நீதிமன்றம், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கெந்திங் நிறுவனத்திடம் அந்தச் சொகுசு கப்பலை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது,” என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது கூறியது.

ஏப்ரல் பிற்பகுதியில், அதற்கான பணத்தை கெந்திங் நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்தும் என்றும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

2018 அக்டோபரில், விற்பனைக்கு விடப்பட்டதில் இருந்து, கடந்த ஐந்து மாதங்களில் அரசாங்கத்தால் பெறப்பட்ட மிக உயர்ந்த ஏலம் இதுவாகும் என்று கூறப்படுகிறது.

எட்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து 1எம்டிபி மோசடி தொடர்பான பணத்தை மீட்பதற்கான புத்ராஜெயா முயற்சியில் அரசாங்கத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.

இந்த விற்பனை, “சந்தை விலையில் சிறந்த மதிப்பைப் பெறுவதில், மிகவும் திருப்திகரமான, வரலாற்றுப்பூர்வமான மற்றும் இலாபகரமானதாக” கருதப்படுவதாக அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் கூறியுள்ளது.

#மலேசிய இன்று


Pengarang :