SELANGOR

உலோக தூய்மைக்கேடு : தொழிற்சாலைக்கு வெ.12 ஆயிரம் அபராதம்

 

ஷா ஆலம், ஏப்.23-

கோலலங்காட், ஜெஞ்சாரோமில் உலோக தூய்மைக்கேட்டை விளைவித்த சர்ச்சைக்குரிய தொழிற்சாலைக்கு 12 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான 6 அபராதங்கள் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உலோகத்தை அட்டவணைக்கு ஏற்ப உருக்கத் தவறிய குற்றத்திற்காக லியோ அச்சுபவர் எனும் இந்நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத்துக்கான ஆட்சி குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து மதிப்பீடு செய்யும் அறிக்கையின் அனுமதியின்றி மீண்டும் உலோகத்தை பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக சுற்றுச் சூழல் தர சட்டத்தின் 344(2) பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனம் குற்றஞ்சாட்டப்பட்டதாக அவர் சொன்னார்.

எரி திராவகம் மற்றும் உலோகத்தின் பக்க விளைவுகள் குறித்து ஆராயும்படி சிலாங்கூர் குடிநீர் நிர்வாகம் (லுவாஸ்), சிலாங்கூர் சுற்றுச் சூழல் துறை (ஜாஸ்) மற்றும் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை ஆகிய துறைகளுக்கு மாநில அரசாங்கம் பணித்துள்ளது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்


Pengarang :