NATIONAL

எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் & பிஎல்எஸ் பிளண்டேஷன் ஒத்துழைப்புடன் டூரியான் தோட்டங்கள்

கோலாலம்பூர், ஏப்.29:

அடிப்படை கொள்கை உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து எஃப்ஜிவி ஹோல்டிங்ஸ் நிறுவனமும் பிஎல்எஸ் பிளண்டேஷன் நிறுவனமும் கூட்டுப் பங்காளித்துவ முறையில் டுரியான் பயிரிடுவதற்கு இணக்கம் கண்டுள்ளன.

இந்த ஒத்துழைப்பின் வழி செம்பனை பயிரிடுவதற்கு பொருத்தமில்லாமலும் பயன்படுத்தப்படாமலும் இருந்த நிலங்களில் இந்தப் பயிர்களை பயிரிட்லாம். இதன் மூலம் இந்தக் குடியேற்றக்காரர்களுக்கு கூடுதல் வருமானம் கிட்டும் என்று எஃப்ஜிவி நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ ஹாரிஸ் ஃபாட்சிலா ஹாசான் தெரிவித்தார்.

இந்தக் கூட்டு உடன்படிக்கை வழி இந்நிறுவனத்தின் கட்டுமானத் துறையும் இதர பிரிவுகளும் நன்மை அடைய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

இந்த உடன்படிக்கை குடியேற்றக்காரர்களுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பளிப்பதோடு இது தேசிய டுரியான் தோட்ட திட்டத்திற்கு ஏற்புடையதாகவும் இது அமைந்துள்ளது என்றும் அனர் சொன்னார்.


Pengarang :