SELANGOR

எம்டிஎச்எஸ் புத்தாக்க போட்டி: பணியாளர்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும்

உலு சிலாங்கூர், ஏப்.24:

இங்குள்ள கோல குபுபாரு டேவான் மெர்டேக்காவில் கொண்டாடப்பட்ட 2019ஆம் ஆண்டு புத்தாக்க தினத்தை முன்னிட்டு புத்தாக்கப் போட்டியில் உலு சிலாங்கூர் மாவட்ட மன்றத்தைச் (எம்டிஎச்எஸ்) சேர்ந்த 37 குழுக்கள் பங்கெடுத்தன.

இந்த வருடாந்திர திட்டமானது புத்தாக்கத்தின் முக்கியத்தும் மற்றும் மக்களுக்கு வழங்கும் சேவையில் இதனை பயன்படுத்துவது குறித்து மன்ற பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுவதாக எம்டிஎச்எஸ் வெளியிட்ட அறிக்கை கூறியது.

இப்போட்டி நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பம் என இரு பிரிவுகளாக நடத்தப்படுகிறது/

நிர்வாகப் பிரிவு போட்டியில், பசுமை சமுக திட்ட்த்தை அறிமுகப்படுத்திய நிலவடிவமைப்பு துறை வெற்றி பெற்றது. அதே வேளையில், தொழில்நுட்ப பிரிவில், ஆர்இ அலுவலக விளக்கு திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனப் பிரிவு வெற்றி பெற்றது.

வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன என்று அந்த அறிக்கை தெரிவித்தது.


Pengarang :