巴生河即将推出“水上德士”服务。
SELANGOR

எஸ்எம்ஜி வாயிலாக புதுப் பொலிவைப் பெற்றுள்ள கிள்ளான் ஆறு!

கோலாலம்பூர், ஏப். 24:

ஒரு காலத்தில் அசுத்தமிக்க ஆறு என்று வருணிக்கப்பட்ட கிள்ளான் ஆறு தற்போது மந்திரி பெசார் கழகத்தின் (எம்பிஐ) சிலாங்கூர் கடல் நுழைவாயில் (எஸ்எம்ஜி) துப்புரவு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக புதுப் பொலிவைப் பெற்றுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் ஆற்றின் தரத்தை உயர்த்தியிருக்கும் அதே வேளையில் இதன் சுற்றுப் பகுதிகளில் இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதிலும் பெரும் பூங்காற்றி வருகிறது என்று லண்டாசான் லுமாயான் நிறுவனத்தின் (எல்எல்எஸ்பி) நிர்வாக இயக்குநர் சைஃபுல் அஸ்மின் நோர்டின் குறிப்பிட்டார்.

ஆற்றின் தரம் படிப்படியாக மேம்பாடு கண்டு வருவதைத் தொடர்ந்து இதன் சுற்றுப் பகுதிகளில் மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆற்று போக்குவரத்து சேவை போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின் வாயிலாக கிள்ளான் ஆறு பொழுதுபோக்கு தலமாக உருமாற்றம் காணும் என்றார்.

“கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் துப்புரவு பணிகள் வாயிலாக ஆற்றின் தர குறியீட்டை (ஐகேஏ) Vஆவது பிரிவில் (அசுத்தம் மற்றும் ஆபத்து) இருந்து III ஆவது பிரிவுக்கு (நல்ல நடுநிலை) நாங்கள் உயர்த்தியுள்ளோம்” என்று சைஃபுல் அஸ்மின் மேலும் சொன்னார்.


Pengarang :