SELANGOR

ஐ-லைசென்ஸ் முறையை எம்பிஎஸ்ஏ அறிமுகம் செய்தது

ஷா ஆலம், ஏப்.8-

நேர்மை மற்றும் ஆக்கப்பூர்வமான நிர்வாக முறையை உறுதிபடுத்த ஐ- லைசென்ஸ் எனும் இணையம் வழி லைசென்ஸ் விண்ணப்ப முறையை ஷா ஆலம் மாநகர மன்றம் (எம்பிஎஸ்ஏ) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் அறிமுக நிகழ்ச்சி எம்பிஎஸ்ஏ உள்ளரங்கில் மாநகர மன்ற துணை மேயர் ரஷிடி ருஸ்லான் தலைமையில் இன்று நடைபெற்றது.

இனி வாடிக்கையாளர்கள் தங்கள் விவேக கைப்பேசயைப் பயன்படுத்தி eps.mbsa.gov.my எனும் இணையத்தளம் வழியாக லைசென்சுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இது மின்னியல் பொது சேவை திட்டம் வழி மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் ரஷிடி தெரிவித்தார்.

சுமார் எட்டு மாதங்கள் நடந்த இதன் மேம்பாட்டு திட்டத்திற்கு மொத்தம் 35 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த மின்னியல் லைசென்ஸ் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் புதிய லைசென்சுக்கு விண்ணப்பிக்கலாம், கட்டணங்கள் செலுத்தலாம் மற்றும் முகப்பிடங்களுக்கு செல்லாமலேயே வர்த்தக லைசென்சுகளை புதுப்பிக்கலாம் என்று அவர் விவரித்தார்.


Pengarang :