NATIONAL

சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்

கோலாலம்பூர், ஏப்.29-

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் வளர்ச்சிக்குத் துணை புரிவதோடு அவற்றின் மேம்பாட்டு செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் ஐந்தாண்டு காலத்தில் பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வாக்குறுதி நிறைவேறும் என்று தெரிவிக்கப்பட்டது.

வேலை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை செலவினம் ஆகிய விவகாரங்களே மலேசியர்களை அதிகம் சூழ்ந்துள்ள கடுமையான பிரச்னைகளாகும் என்று புத்ரா மலேசியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் நிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் அஸாலி முகமது கூறினார்.

“அரசாங்கம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த விரும்பினார், மேம்பாட்டுச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும்” என்றார் அவர்.

இதன் வழி பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, எரிசக்தி மற்றும் பொது போக்குவரத்து ஆகியவற்றோடு விவசாய துறைக்கும் பேருதவியாக அமையும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :