SELANGOR

சுபிட்சத்தை வளப்படுத்த இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கம் அவசியம்

ஷா ஆலம், ஏப்.29-

‘மலாய்க்காரர்கள் மலாய்க்காரர்களுக்கு உதவுவது’, ‘சீனர்கள் சீனர்களுக்கு உதவுவது’ ‘இந்தியர்கள் இந்தியர்களுக்கு உதவுவது’ என்ற கொள்கையானது இனங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நடவடிக்கைக்கு இடையூறாக அமையும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நினைவுறுத்தினார்.

இந்தக் கொள்கை இனக்கலவரம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மாறாக, அனைத்து மனிதர்களுக்கும் மிருகங்கள் உட்பட அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது என்றார் அவர்.

பரிவுமிக்க செயல்களால் மட்டுமே சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்க முடியும். ஒருவர் மீது மற்றொருவர் சந்தேகம் கொள்ளாமல் வாழ முடியும் என்றும் அவர் சொன்னார்.

அண்மையில் நியூசிலாந்து மற்றும் இலங்கையில் நடந்த சம்பவங்களை உற்று நோக்கினால், அங்கு குறிப்பிட்ட இனத்தவர் தங்கள் அதிகார வலிமையைக் காட்ட மற்ற இனத்தவரிடம் நிரூபிக்க முனைந்தபோது விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன என்று அமிருடின் சுட்டிக் காட்டினார்.


Pengarang :