SELANGOR

ஜப்பான் தொழில்துறை ஜாம்பவானை மந்திரி பெசார் சந்தித்தார்

ஷா ஆலம், ஏப்.22-

மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தலைமையிலான சிலாங்கூர் பேராளர் குழு அண்மையில் ஜப்பான் சென்றிருந்த போது அந்நாட்டின் மிகப் பெரிய கட்டுமான ஜாம்பவான் டேய்வா ஹவுஸ் தொழிற்சாலை நிறுவனத்தை சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது, சிலாங்கூரில் அந்நிறுவனம் மேற்கொள்ளவிருக்கும் அடுத்த கட்ட திட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக அமிருடின் கூறினார்.

“டேய்வா நிறுவனம் ஏற்கனவே அதன் தளவாட மையம் மற்றும் விநியோக மையத்தையும் நிர்மாணிக்கும் பணியை இங்கு தொடங்கிவிட்டது” என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட அந்த மையங்கள் ஷா ஆலமில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வேளையில், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவை நிறைவுபெறும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :