NATIONAL

ஞானராஜா மீது மேலும் 68 குற்றச்சாட்டுகள்

கோலாலம்பூர், ஏப்.8-

பினாங்கு கடலுக்கடியிலான சுரங்கப் பாதை திட்டம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வர்த்தகர் எம்.ஜி. ஞானராஜா மீது மேலும் பல குற்றச்சாட்டுகள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று சுமத்தப்பட்டன.

11.4 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கள்ளப் பணத்தை மாற்றும் நடவடிக்கையில் 68 அமைப்புகளுடன் சேர்ந்து ஈடுபட்டிருந்ததாக ஞானராஜா ( வயது 38) மீது குற்றம் சுமத்தப்பட்டது.

முன்பு டத்தோஸ்ரீ என்ற அழைக்கப்பட்ட இவருக்கு வழங்கப்பட்ட பட்டம் கடந்த மார்ச் 13ஆம் தேதி பறிக்கப்பட்டது.. நீதிபதி ரோஸினா அயோப் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்து ஞானராஜா விசாரணை கோரினார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இவருக்கு கூடுதல் பட்சம் 15ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் சம்பந்தப்பட்ட தொகையைக் காட்டலும் 5 மடங்கிற்கும் அதிகமான அபராதம் விதிக்கப்படலாம்.

 


Pengarang :