SELANGOR

நாட்டில் முதலாவது மின்னியல் வர்த்தக மையமாக சிலாங்கூர்!

கோத்தா டாமன்சாரா, ஏப். 23:

சிலாங்கூர் மாநிலத்தில் நாட்டின் முதலாவது ஓரிட மின்னியல்
வர்த்தக மையத்தை (இஎம் ஹப்) உருவாக்கும் தனியார் துறையின் முயற்சியை சிலாங்கூர் அரசாங்கம் வரவேற்றது. வரும் 2035 ஆம் ஆண்டில் விவேக மாநில மேம்பாட்டிற்கு நிகராக தெற்காசியாவிலேயே சிறந்த மின்னியல் வர்த்தக மையமாக சிலாங்கூர் திகழ்வதற்கு இத்திட்டம் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

” இந்த இஎம் ஹப் ஓரிட சேவை மையம் 2022 ஆம் ஆண்டில் பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வழி சிலாங்கூரில் அமைக்கப்படும் முதலாவது மின்னியல் வர்த்தக மையமாக இது திகழும்” என்றார்.

“மின்னியல் வர்த்தக மையத்தை அமைப்பதற்கு தங்களின் முதலாவது இடமாக சிலாங்கூரை இவர்கள் தேர்ந்தெடுத்ததற்காக மாநில அரசாங்கம் மனநிறைவு கொள்கிறது” என்று
இங்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா மற்றும் தகவல் தொழில்நுட்ப மற்றும் சிலாங்கூர் மின் வர்த்தக மன்றத்தினால் சிலேண்ட் குரூப் மேம்பாட்டு நிறுவனத்திடம் மின்னியல் வர்த்தக மையத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசினார்.


Pengarang :