NATIONAL

நீர் உடன்படிக்கை : அமைதியான முறையில் தீர்வு காண மலேசியாவும் சிங்கையும் இணக்கம்

புத்ரா ஜெயா, ஏப்.9-

நீர் உடன்படிக்கை தொடர்பான விவகாரத்திற்கு அமைதியான முறையில் தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியா-சிங்கப்பூர் தலைவர்களுக்கு இடையிலான 9ஆவது சுற்று பேச்சு வார்த்தையின் நீர் உடன்படிக்கை குறித்தும் விவாதிக்கப்படும். நாட்டிற்கு வருகை புரிந்துள்ள சிங்கை பிரதமர் லீ சியெங் லூனுடன் பிரதமர் மகாதீர் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பார்.

1962ஆம் ஆண்டு காலாவதியாகும் சுங்கை ஜோகூர் நீர் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நீரின் விலையை உயர்த்துவது குறித்து இரு நாடுகளும் பல ஆண்டுகளாக விவாதித்து வந்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து 90களிலும் 2000ஆம் ஆண்டுகளிலும் விரிவான விவாதம் நடத்தியுள்ளோம் என்று சிங்கை பிரதமர் லீயும் பங்கேற்ற செய்தியாளர் கூட்டத்தில் மகாதீர் கூறினார்.

சிங்கப்பூரிடம் விற்கப்படும் தண்ணீருக்கான விலை நியாயமாக இல்லை என்று கடந்தாண்டு மத்தியில் மகாதீர் கூறியதைத் தொடர்ந்து இருநாடுகளும் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தன.

2061ஆம் ஆண்டு காலாவதியாகு அந்த உடன்படிக்கையானது சுங்கை ஜோகூரில் இருந்து 250 மில்லியன் கேலன் நீரை , ஒவ்வொரு 1,000 கேலன் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை 3 காசுக்கு வாங்க சிங்கப்பூருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை 1,000 கேலன் தண்ணீருக்கு 50 காசு என்ற விலையில் ஜோகூர் வாங்குவது என்றும் அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :