SELANGOR

புதிய பொருளாதார களமாக இலக்கவியல் பொருளாதாரம் திகழ்கிறது

கோத்தா டாமன்சாரா, ஏப்.23:

மின்னியல் பொருளாதாரம் வாயிலாக பல்வேறு பொருளாதார முயற்சிகளை மேற்கொள்வதற்கு சிலாங்கூர் மாநிலம் கடப்பாடு கொண்டுள்ளதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

அவற்றுள் செயற்கை அறிவாற்றல் (ஏஐ), உளோக்செயின், மின்னியல் வர்த்தகம், கணினி பொதுவுடைமை, மின்னியல் விளையாட்டு, ஃபின்தெக் மற்றும் 4ஆவது தொழில்துறை புரட்சி ஆகியவை அடங்கும் என்றார் அவர்.

“ஆயினும், இந்தப் புதிய பொருளாதார மேம்பாடு, குறிப்பாக இலக்கவியல் துறையினால் எந்த தரப்பினரும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்துள்ளோம்” என்றார்.

எனவே, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்கள் இலக்கவியல் சந்தையில் ஊடுருவதற்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதில் தொழில்நுட்ப தகவல் மன்றமும் சிலாங்கூர் மின்னியல் வர்த்தகமும் (சிடெக்) முக்கிய பங்காற்றி வருகின்றன என்று அமிருடின் தெரிவித்தார்.


Pengarang :