SELANGOR

மிஹாஸ் 2019: சிலாங்கூர் பெவிலியனை ராஜா மூடா திறந்து வைத்தார்

கோலாலம்பூர், ஏப்.4-

அனைத்துலக மலேசிய ஹலால் கண்காட்சியில் சிலாங்கூர் பெவிலியனை (மிஹாஸ் 2019) மேன்மை தங்கிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமிர் ஷா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

அவருடன் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, துறைமுகம், தொழில்துறை மற்றும் சிறு நடுத்தர வர்த்தகத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் மற்றும் தொழில்முனைவர் மேம்பாடு, புறநகர் மற்றும் பாரம்பரிய கிராம மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், மலேசிய அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையத்தில் (மிடேக்) பொருத்தப்பட்டுள்ள நினைவார்த்த பலகையை ராஜா மூடா அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

“மேட் இன் சிலாங்கூர்” என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்ட சிலாங்கூர் பெவிலியன் திறப்பு விழாவையொட்டி தெங்கு அமிர் ஷா, அமிருடின் ஷாரி மற்றும் சாங் கிம் ஆகியோரின் முன்னிலையில் மூன்று உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன.


Pengarang :