NATIONAL

மெட்ரிகுலேஷன் விவகாரம் : கல்வி அமைச்சு தீர்வு காணும்! – டத்தோஸ்ரீ அஸ்மின் அலி

உலு கிள்ளான், ஏப்.30-

மெட்ரிகுலேஷன் விவகாரத்திற்கு ஒரு சிறந்த தீர்வைக் காணும் பொறுப்பை கல்வி அமைச்சிடம் விட்டு விட வேண்டும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் உயர்க்கல்வி கழகங்களில் இடம் கிடைக்க வேண்டும் என்பது ஓர் அடிப்படையான கொள்கையாகும் என்றார் அவர்.

“என்னைப் பொறுத்தமட்டில் சிறந்த தேர்ச்சியைப் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்க வேண்டும். அவர்கள் நாட்டின் எதிர்கால சொத்து என்பதால் அவர்களைப் பேணுவதோடு தரமான கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும்” என்று அஸ்மின் வலியுறுத்தினார்.

ஆயினும், இதை செயல்படுத்தும் வழியை கண்டறியும் பொறுப்பு கல்வி அமைச்சினுடையது. அந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான மெட் ரிகுலேஷன் கோட்டா குறித்து வினவிய போது மேற்கண்டவாறு அஸ்மின் கருத்துரைத்தார்.


Pengarang :