NATIONAL

மோட்டார் சைக்கிள் டோல் கட்டணம் அகற்றம்: பொதுப்பணி அமைச்சின் சாதனை

கோலாலம்பூர், ஏப்.29-

மூன்று மோட்டார் சைக்கிள் பாதைகளுக்கான டோல் கட்டணம் அகற்றப்பட்டதன் வழி சுமார் 72,000 மோட்டார் சைக்கிளோட்டிகள் பயனடைந்துள்ளனர். இது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் பொதுப் பணி அமைச்சு நிகழ்த்திய ஒரு சாதனை என்று தெரிவிக்கப்பட்டது.

அதோடு, சிஐடிபி எனும் கட்டுமானத் தொழில்துறை மேம்பாட்டு வாரியத்தின் கிளை ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது மற்றொரு பெருமையாகக் கருதப்படுகிறது என்று பொதுப்பணி அமைச்சர் பாரு பியான் தெரிவித்தார்.

“இவ்வாண்டு தொடக்கத்தில் மோட்டார் சைக்கிள் டோல் கட்டணச் சாவடி அகற்றப்பட்டதால பினாங்கு பாலத்தின் வழி 20,000 பயனீட்டாளர்களும், சுல்தான் அப்துல் ஹாலிம் பாலத்தின் வழி 2,000 பயனீட்டாளர்களும் ஜோகூர் தஞ்சோங் குப்பாங் டோல் சாவடியைப் பயன்படுத்தும் 50,000 பயனீட்டாளர்களும் பயனடைந்துள்ளனர்” என்றார் அவர்.

தஞ்சோங் குப்பாங் டோல் சாவடியை அகற்றும் உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள கால வரம்புக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னதாகவும் பினாங்கு, சுல்தான் அப்துல் ஹாலிம் ஆகிய பாலங்கள் 34 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அகற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


Pengarang :