NATIONAL

ரோம் சாசனம் அங்கீகரிக்கப்பட்டால் நான்கு குற்றச்செயல்கள் மலேசிய சட்டத்தின் கீழ் வரும்

கோலாலம்பூர், ஏப்.18-

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி) ரோம் சாசனத்தை நாடு அங்கீகரித்தால், இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனிதாபிமான குற்றங்கள் மற்றும் படையெடுப்பு ஆகிய குற்றச்செயல்களுக்கான சட்டம் மலேசிய சட்டங்களில் இடம்பெறும் என்று .வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுடின் அப்துல்லா கூறினார்.

இது அங்கீகரிக்கப்பட்ட பின்னர் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடப்பு சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் அல்லது புதிய சட்டமாகவும் தோற்றுவிக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார்.

“இந்தச் சட்டம் தோற்றுவிக்கப்பட்டால், மேற்கண்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் தனிநபர் அல்லது தலைவர்கள் ( அரசர் தவிர்த்து ) மீது மலேசிய நீதிமன்றங்களில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், இந்த வழக்கில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தலையிடாது” என்று பெர்னாமா செய்தி நிறுவனத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்தார்.

 


Pengarang :