NATIONAL

வாக்காளர் வயது வரம்பை 18ஆக குறைக்கும் சட்டத்தில் திருத்தம்

ஷா ஆலம், ஏப்.1-

வாக்காளர் வயது வரம்பை 21 வயதிலிருந்து 18ஆக குறைப்பதற்கு ஏதுவாக கூட்டரசு அரசியலமைப்புச் சட்டமைப்பில் திருத்தம் செய்ய அரசாங்கம் எண்ணியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மாற்றத்திற்கு அமைச்சரவை சம்மதம் தெரிவித்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சையிட் சடிக் சையிட் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இவ்வாண்டு மத்தியில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இத்திருத்தம் குறித்து தாம் விவாதிக்கவிருப்பதாக அவர் சொன்னார்.

இவ்வாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் இளைஞர் விளையாட்டு துறை இந்தத் தீர்மானம் குறித்து அரசாங்கத்தின் சார்பில் விவாதிக்கும் என்று மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் சையிட் தெரிவித்தார்.

வாக்காளர்களின் வயது வரம்பை குறைப்பது குறித்து கடந்த ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொது தேர்தலின் போது பக்காத்தான் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :