NATIONAL

வெற்றியடைவதற்குத் தேவையான மூன்று நெறிகள் – துன் மகாதீர்

ஷா ஆலம், ஏப்.2:

வெற்றியடைய விரும்பும் எந்தவோர் இனமும் சுறுசுறுப்பு, விவேகம் மற்றும் நேர்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பது அவசியம் என்று துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.

“பிறரைப் போல் நம்மிடம் தனித் திறமை ஏதும் இல்லை என்றாலும் சுறுசுறுப்பையும் விவேகத்தையும் வாழ்க்கையின் கொள்கையாக நாம் கொண்டிருந்தால், வெற்றி பெறுவதற்குத் தேவையான உத்வேகம் நமக்கு கிடைக்கும்” என்றார் அவர்.

1947ஆம் ஆண்டில் தாம் சிங்கப்பூரில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த போது, பௌதிகப் பாடத்தில் முதன்மை மாணவன் எனும் நிலையை அடைவதற்கு தமது சுறுசுறுப்பான உழைப்பே முக்கிய காரணமாக இருந்தது என்று தமது இளமைக் கால அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

உண்மையில், நமது வாழ்க்கை நெறியே நாம் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது. நம்மிடம் உள்ள பெரும்பான்மையான வாழ்க்கை நெறிகள் நமக்கு வலுவான நம்பிக்கைகளை ஏற்படுத்துவதில்லை என்று யூ ஐடி எம்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழித்தெழும் ஆசியாவின் வேங்கை மாநாட்டில் ஆற்றிய சிறப்புரையில் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.


Pengarang :