3 டபள்யூ பெருவிழா: கோலலங்காட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

Norway

Wartawan

kgsekar

3 டபள்யூ பெருவிழா: கோலலங்காட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

மோரிப், ஏப்.22-

நான்காவது கட்டமாக நடத்தப்பட்ட “3 டபள்யூ” எனும் மகளிர், சமூகநலன் மற்றும் ஆரோக்கியம் எனும் பெருவிழாவிற்கு கோலலங்காட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்று மதியம் வரை சுமார் 2,000 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சுகாதாரம், சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுக்கான ஆட்சி குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மஹ்முட் தெரிவித்தார்.


“இன்று காலை நடைபெற்ற 10,000 அடிகளை எடுத்து வைக்கும் நிகழ்ச்சியில் 1,500 பேர் பங்கெடுத்தனர். இந்த எண்ணிக்கை இன்றிரவுக்குள் 5,000ஐ எட்டும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுவரை நடத்தப்பட்ட இந்தத் தொடர் நிகழ்ச்சிகளில் அதிக வருகையாளர்களை பதிவு செய்த பகுதியாக அம்பாங் ஜெயா முன்னிலை வகிக்கிறது என்று டாக்டர் சித்தி கூறினார்.

RELATED NEWS

Prev
Next