அனைத்து இனங்களுக்கும் ஒரே பள்ளி முறையை அமல்படுத்துவது சிரமம் ! – துன் மகாதீர் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

அனைத்து இனங்களுக்கும் ஒரே பள்ளி முறையை அமல்படுத்துவது சிரமம் ! – துன் மகாதீர்

ஷா ஆலம், மே 9-

நாட்டில் இன உணர்வு இன்னும் நீடிப்பதால், அனைத்து இனங்களுக்கும் ஒரு பள்ளி என்ற முறையை அமல்படுத்தவது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தங்களை ஒரு மலேசியன் என்று கருதுவதில் மலேசியர்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்பதே உண்மையான நிலையாகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.


இதுதான் இன்று நாம் எதிர்நோக்கும் சூழலாகும். ஓர் இனத்தின் மீது கவனம் செலுத்துவதை அரசாங்கம் குறைத்துக் கொண்டு வருகிறது. ஆயினும் பள்ளி உட்பட பல்வேறு விவகாரங்களில் அரசாங்கம் எதிர்ப்பை சந்தித்து வருகிறது என்றார் அவர்.

ஒரே பள்ளி முறையை நாம் மேற்கொள்ள விரும்பினால் நிச்சயம் அதற்கு ஆதரவு இருக்காது. உண்மையில் இது போன்ற விவகாரங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் இவை நம்மை பலவீனப்படுத்துவிடும் என்றும் அவர் சொன்னார்.

RELATED NEWS

Prev
Next