இசிஆர்எல் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரபலப்படுத்த சிறப்பு குழு | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

இசிஆர்எல் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரபலப்படுத்த சிறப்பு குழு

கோலாலம்பூர், மே 15-

கிழக்குக் கரை ரயில் திட்டம் (இசிஆர்எல்) தொடர்பான தொழிற்துறை பூங்கா, அடிப்படை வசதிகள், கட்டுமான மையம் ஆகியவற்றை பிரபலப்படுத்த சிறப்பு குழுவொன்றை மைடா எனும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அமைத்துள்ளது.

இசிஆர்எல் பெருஞ்சுவர் நெடுகிலும் மேற்கொள்ளப்படக் கூடிய பொருளாதார விரைவு திட்டங்களை (ஈஏபி) எளிமைப்படுத்த, மதிப்பிட, மற்றும் மறு ஆய்வு செய்வதற்கு இந்தச் சிறப்பு குழு அமைக்கப்படுவதாக மைடா அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது.


இந்தத் திட்டத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய தரப்புகளுக்கிடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்வது உட்பட அவற்றின் நடவடிக்கைகளை பிரபலப்படுத்துவதும் இந்தச் சிறப்புக் குழுவின் பொறுப்பாகும்.

கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி, பெய்ஜிங்கில் பிரதமர் துன் மகாதீர் முன்னிலையில் மைடாவுக்கும் சீன தொடர்பு கட்டுமான நிறுவனத்திற்கும் (சிசிசிசி) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டதாக அது கூறியது.

RELATED NEWS

Prev
Next