உணவகங்களில் புகை பிடிக்கத் தடை : சுகாதார அமைச்சின் சாதனை | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

உணவகங்களில் புகை பிடிக்கத் தடை : சுகாதார அமைச்சின் சாதனை

கோலாலம்பூர், மே 8-

உணவகங்களில் புகை பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கடந்தாண்டு அக்டோபர் மாதவாக்கில் மக்களிடையே பிரசித்தி பெறக் காரணமானது என்று கூறலாம்.
குளுரூட்டி வசதி கொண்ட உணவகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்கள் உள்பட அனைத்து உணவகங்களுக்கும் இந்தத் தடை விரிவாக்கம் காணப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்ததைத் தொடர்ந்து இவ்விவகாரம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்களுக்குத் தரமான மற்றும் முழுமையான சுகாதார பராமரிப்பு சேவையை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இதுவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு உணர்ச்சிப்பூர்வ விவகாரமாகவும் மாறியது எனலாம்.

இந்நடவடிக்கைக்கு எதிராக நீண்ட காலமாக புகைப் பிடிப்போரிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. அதே வேளையில், இதன் புகையைச் சுவாசிப்போர் இந்நடவடிக்கையை “விலை மதிப்புள்ள பரிசாகக்” கருதுகின்றனர்.


எனினும், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் டாக்டர் ஜூல்கிப்ளி தலைமையிலான சுகாதார அமைச்சு இதனை 2019 ஜனவரி 1 ஆம் தேதி வெற்றிகரமாக அமல்படுத்தியது.

RELATED NEWS

Prev
Next