உணவு வங்கி திட்ட சட்ட மசோதா: : முறையாக மேற்கொள்ளப்படும் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

உணவு வங்கி திட்ட சட்ட மசோதா: : முறையாக மேற்கொள்ளப்படும்

புத்ரா ஜெயா, மே 13-

உணவு வங்கி திட்டம் தொடர்பில் வரையப்பட்டு வரும் சட்டமானது இத்திட்டத்தின் வியூகப் பங்காளி மற்றும் முக்கிய தரப்பு ஆகிய இரு தரப்புகளின் ஈடுபாடு தொடர்ச்சியாக இருப்பதை உறுதிசெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சட்ட திருத்தத்தின் போது உணவு வங்கி திட்டத்தை அமல்படுத்தியுள்ள இதர நாடுகளின் அனுபவங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.


உணவு வங்கி திட்டம் தொடர்பான முதல் சட்ட வரைவு நகல் மீது ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்காக இது தேசிய சட்டத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உணவு வங்கி கருத்தரங்கை தொடக்கி வைத்த பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் நசுத்தியோன் தெரிவித்தார்.

இந்தச் சட்ட மசோதா விவகாரத்தில் தாங்கள் அவசரப்பவில்லை என்றும் இவ்வாண்டு இறுதியில் நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

 

RELATED NEWS

Prev
Next