ஊழலை துடைத்தொழிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாடே மக்களின் ஆதரவு சரிவுக்கு காரணம்! – பிரதமர் துன் மகாதீர் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

ஊழலை துடைத்தொழிப்பதில் அரசாங்கத்தின் உறுதிப்பாடே மக்களின் ஆதரவு சரிவுக்கு காரணம்! – பிரதமர் துன் மகாதீர்

புத்ரா ஜெயா, மே 9-

ஊழலுக்கு எதிராக பக்காத்தான் ஹராப்பான் கடைபிடிக்கும் கண்டிப்பான முறையே அரசாங்கம் மீதான மக்கள் ஆதரவு சரிந்துள்ளதற்கான காரணம் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஒப்புக் கொண்டார்.

ஊழலைக் கடைபிடிக்கும் தரப்பிடம் இருந்து கூடுதல் வருமானம் கிடைக்காத தரப்பினரும் அதிருப்தியுற்றவர்களில் அடங்குவர் என்றார் அவர்.


“அரசாங்கம் மேற்கொள்ளும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக சிலருக்கு இப்போது கூடுதல் வருமானம் கிடைப்பதில்லை. முன்பு இது கிடைத்தது. இப்போது கிடைப்பதில்லை” என்றார்.

“எனவே முன்பு மாற்று வழியில் கிடைத்து வந்த கூடுதல் வருமானம் நின்று போனதால் பலர் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக பக்காத்தானுக்கான வாக்குகள் சரிந்துள்ளததை நாம் பார்த்து வருகிறோம்” என்று பக்காத்தான் அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நடந்த சிறப்பு உரையாடல் நிகழ்ச்சியில் மகாதீர் தெரிவித்தார்.

RELATED NEWS

Prev
Next