எஸ்.எம்.முகமட் இட்ரிஸ், தனது 93-வது வயதில் காலமானார் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

எஸ்.எம்.முகமட் இட்ரிஸ், தனது 93-வது வயதில் காலமானார்

ஜோர்ஜ் டவுன், மே 17:

மலேசியாவில் பயனீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதிலும், பயனீட்டாளர் பிரச்சனைகளை ஒரு அரசு சார்பற்ற இயக்கமாக ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின்’ மூலம் முன்னெடுத்த வகையிலும் தனித்துவம் மிக்க சாதனையாளராகத் திகழ்ந்த எஸ்.எம்.முகமட் இட்ரிஸ், தனது 93-வது வயதில் இன்று காலமானார்.

இருதயக் கோளாறினால் அவர் பிற்பகல் 4.45 மணியளவில் பினாங்கு கிளனிகல்ஸ் தனியார் மருத்துவமனையில் காலமானார். உடல் நலம் குன்றிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவராக இருந்த அவர் நாட்டில் மக்களின் வாழ்க்கை நலத்தை  மேம்படுத்துவதற்கும், பயனீட்டாளர்களுக்கான உரிமைகளை நிலை நிறுத்துவதிலும் பெரும் பாடுபட்டிருக்கிறார். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை நாட்டிலேயே சிறந்த, முன்னுதாரணமான அரசு சார்பற்ற இயக்கமாக வளர்த்ததிலும், பல்வேறு அனைத்துலக நிறுவனங்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு எதிராக உண்மையை எடுத்துரைத்ததிலும் முகமது இட்ரிஸ் முன்னணி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS

Prev
Next