ஜோக்கோவிற்கு மந்திரி பெசார் வாழ்த்து | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

ஜோக்கோவிற்கு மந்திரி பெசார் வாழ்த்து

ஷா ஆலாம், மே 21:

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோக்கோ விடோடோ(ஜோக்கோவி) மற்றும் துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மாருஃப் அமின் ஆகிய இருவருக்கும் இம்மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் .
கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் இவ்விருவரும் வெற்றி பெற்றனர்.

இதன் வழி இவ்விரு தலைவர்களும் வருங்காலத்தில் மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான உறவைத் தொடர்ந்து வலுப்படுத்துவர் என்று நம்பிக்கை தெரிவித்தார் மந்திரி பெசார்.
” ஜோக்கோவி மற்றும் மாருஃப் அமின் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தோனேசியாவைத் தொடர்ந்து வெற்றிகரமாக வழிநடத்த வாழ்த்துகள்” என்றார் அமிருடின்.


” உங்கள் இருவரின் ஆட்சியின் கீழ் மலேசியா-இந்தோனேசியா இடையிலான உறவு தொடர்ந்து வலுப் பெறட்டும்” என்று டுவிட்டரில் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 6.4 லட்சம் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஜோக்கோவி இம்முறை 16.95 லட்சம் பெரும்பான்மை வாக்குகள் பெற்று மக்கள் மத்தியிலான தனது செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளார்.

RELATED NEWS

Prev
Next