நேர்மையுடன் கடமையாற்றுவீர்! – மந்திரி பெசார் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

நேர்மையுடன் கடமையாற்றுவீர்! – மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 17-

தங்கள் கடமைகளை நேர்மையாக நிறைவேற்ற வேண்டும் என்று மாநில அரசு பணியாளர்களுக்கு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு நாட்டின் மற்றும் மாநிலத்தின் முதுகெலும்பாக விளங்குவது பொதுச் சேவை துறையாகும் என்பதால் அரசு பணியாளர்களின் சேவை தரமாக இருப்பது அவசியம் என்றார் அவர்.


“ஒரு மேம்பாடடைந்த நாட்டில், நாட்டு மக்கள் நன்மையைக் கருதி பொதுச் சேவைத் துறை நிபுணத்துவ முறையில் அமைந்திருப்பது முக்கியமாகும்” என்றும் அவர் சொன்னார்.

“இம்மாநிலத்தின் பொதுச் சேவை ஊழியர்களின் ஆற்றலிலும் கடப்பாட்டிலும் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. இவர்களின் சேவைத் தரம் உலகத் தரத்திற்கு உயரும்” என்றார் மந்திரி பெசார்.

 

RELATED NEWS

Prev
Next