போனஸ்: அரசு ஊழியர்கள் மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

போனஸ்: அரசு ஊழியர்கள் மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது

ஷா ஆலாம், மே 17-

மாநில அரசாங்கத்தின் சிறப்பு நிதியானது அரசின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையையே காட்டுகிறது என்று கூறப்படுகிறது.

கடுமையாக உழைக்கும் அரசு ஊழியர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இவர்களுக்கு இந்த சிறப்பு நிதி வழங்கப்படுவதாக மாநில செயலக அலுவலக நிர்வாக சேவைப் பிரிவு அதிகாரி சுலைமான் அஸஹார் கூறினார்.


“அதே வேளையில், அரசாங்கத்தின் கொள்கைகளை எவ்வித ஐயப்பாடுமின்றி மேற்கொண்டு வரும் அரசு ஊழியர்கள் மீது மாநில அரசாங்கம் கொண்ட நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.

” தவிர, பொருத்தமான நேரத்தில் இது வழங்கப்படுகிறது. வழக்கமாக சம்பளத்தைப் பெருநாளுக்கான தேவைக்குப் பயன்படுத்துவோம். ஆகையால், இந்த உதவி நிதி பெருநாளின் மூன்றாம் நாளில் வழங்கப்படுகிறது. பிறகு வரும் செலவினங்களை இதன் வழி சமாளிக்கலாம்” என்று இங்குள்ள மாநில செயலக அலுவலக ஜூப்ளி பேரா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிலாங்கூர் கினியிடம் சுலைமான் இவ்விவரங்களை வெளியிட்டார்.

RELATED NEWS

Prev
Next