யாபிம் தலைமை இயக்குநர் தற்காலிக இடைநீக்கம்! | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

யாபிம் தலைமை இயக்குநர் தற்காலிக இடைநீக்கம்!

கோலாலம்பூர், மே 21:

மலேசிய இஸ்லாமிய பொருளாதார மேம்பாட்டு அறவாரியத்தின் (யாபிம்) தலைமை இயக்குநர் டத்தோ அபிபுல்லா சம்சுடின் இன்று தொடங்கி இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீதான முறைகேடுகள் தொடர்பாக முழுமையான விசாரணை மே‌ற்கொ‌ள்ளப்படுவதற்கு ஏதுவாக அபிபுல்லா தமது பணியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக யாபிம் அறங்காவலர் வாரிய தலைவர் டத்தோ டாக்டர் முகமது டாவுட் பாக்கார் அறிக்கை ஒன்றின் வழி குறிப்பிட்டார்.
“இந்தக் கால கட்டத்தில் இவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான புலன் விசாரணைக்கு உதவும் பொருட்டு விசாரணை குழுவினர் இவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவர்” என்றார் அவர்.

முன்னதாக, கடந்த பொதுத் தேர்தலின்போது குறிப்பிட்ட தரப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்று அபிபுல்லா யாபிம் ஊழியர்களிடம் பணித்த காணொளி தொடர்பில் பிகேஆர் தகவல் பிரிவு இயக்குனர் ஃபாமி ஃபாட்சில் போலீஸில் புகார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

RELATED NEWS

Prev
Next