ஷா ஆலாம் டத்தோ பண்டாராக ஹாரிஸ் நியமனம் | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

ஷா ஆலாம் டத்தோ பண்டாராக ஹாரிஸ் நியமனம்

ஷா ஆலாம், மே 15-

சிலாங்கூர் இஸ்லாமிய சமய துறை இயக்குநனர் டத்தோ ஹாரிஸ் காசிம் ஷா ஆலாம் டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் இப்புதிய பதவி இம்மாதம் 10 ஆம் தேதி முதல் நடப்புக்கு வந்ததாகக் கூறப்பட்டது.

அதே வேளையில், கிள்ளான் நகராண்மைக் கழக (எம்பிகே) செயலாளர் அடி ஃ பைசால் அகமது தர்மிசி சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்ற நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். மே 10 ஆம் தேதி இவர் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.


இத்தகவலை மாநில அரசாங்க செயலாளர் டத்தோ முகமது அமின் அகமது அஹ்யா மாநில அரசாங்க உயரதிகாரிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கியபோது அறிவித்தார்.

டத்தோ அகமது ஜஹாரின் முகமது சாஹாட்டிற்குப் பதிலாக ஹாரிஸ் டத்தோ பண்டாராக நியமிக்கப்பட்டிருக்கும் வேளையில் முகமது ஜுபிர் இட்ருசுக்குப் பதிலாக அடி ஃபைசால் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

RELATED NEWS

Prev
Next