PENANG 14/05/18: Incoming Minister of Finance Lim Guan Eng react as he speaks to the press during press conference at Khazanah Office. PICTURE BY SAYUTI ZAINUDIN
NATIONAL

அமெரிக்காவின் 1எம்டிபி பணம் கடனை அடைக்கப் பயன்படுத்தப்படும்

புத்ரா ஜெயா, மே 9

நாட்டிடம் ஒப்படைக்கப்பட்ட 1எம்டிபி பணம், அந்நிறுவனத்தால் நாடு அடைந்துள்ள கடன் தொகையான 51 பில்லியன் வெள்ளையை அடைக்கப் பயன்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

அந்த கடன் தொகையான 51 பில்லியனில் அக்கடனுக்கான வட்டி தொகையான 10.8 பில்லியன் வெள்ளி மற்றும் அக்கடனை அடைக்க நிதியமைச்சு இதுவரை 8.6 பில்லியன் வெள்ளியை செலவிட்ட தொகையும் அடங்கும் என்றார் அவர்.

உலகெங்கிலும் உள்ள 1எம்டிபி சொத்துக்களை மீட்டெடுக்கவும் திரும்பப் பெறவதற்காக சட்ட ஆலோசனை நல்கிய வழக்கறிஞர் கட்டணத்திற்காகவும் இந்தத் தொகை பயன்படுத்தவிருப்பதாக லிம் விளக்கமளித்தார்
முறைகேடான வகையில் கையகப்படுத்தப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீட்க அமெரிக்காவின் நீதித் துறை மேற்கொண்ட முயற்சியின் பயனாக மீட்கப்பட்ட 1எம்டிபி பண்மான 322 மில்லியன் அமெரிக்க டாலர் (1.3 பில்லியன் வெள்ளி) நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேசிய சட்டத் துறை தெரிவித்தது.


Pengarang :