SELANGOR

இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு வெ 6 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், மே 27-

மாநிலத்தில் உள்ள இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு இவ்வாண்டு சிலாங்கூர் அரசாங்கம் 6 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இஸ்லாம் அல்லாத சமய விவகார செயற்குழுவின் கீழ் இயங்கும் சீன கோயில், ஆலயம், தேவாலயம் மற்றும் குருதுவாரா ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு இந்த ஒதுக்கீட்டு தொகை வழங்கப்படவிருப்பதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

அதே வேளையில், பௌத்த சமயத்தினர் எதிர்நோக்கும் பிரச்னைகளை மாநில அரசாங்கம் அறிந்துள்ளது என்றார் அவர்.
“கடந்த 40 ஆண்டுகளாக இந்த பௌத்த சமய போதனையை பின்பற்றுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மேலும் அதிக எண்ணிக்கையிலான நிலங்களும் வழிபாட்டு தலங்களும் தேவை என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது” என்றார்.


Pengarang :