NATIONAL

ஊழலில் ஈடுபடும் நிறுவனமும் எஸ்பிஆர்எம்மின் புதிய சட்டத்தின் கீழ் உட்படுத்தப்படும்

கோலாலம்பூர், மே 30-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் 2009ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் செக்‌ஷன் 17 ஏ எனும் புதிய சட்டப்பிரிவை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இச்சட்டம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஊழலில் ஈடுபடும் நிறுவனங்கள் தொடர்பான இச்சட்டமானது, ஐக்கிய நாட்டு சபையின் ஊழலுக்கு எதிரான மாநாட்டின் 26ஆவது சட்டப் பிரிவுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் துணை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

“இந்தப் புதிய சட்டம் திருத்தம் செய்யப்படுவதற்கு முன்பிருந்த 2009ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டமானது ஊழலில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தனிநபர் மீது மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளது” என்றார் அவர்..
எனவே, திருத்தி அமைக்கப்பட்ட செக்‌ஷன் 17ஏ சட்டப்பிரிவின் கீழ் ஊழலில் ஈடுபடும் நிறுவனமும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.


Pengarang :