SELANGOR

கேரித்தீவு தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு பேருந்து கட்டண உதவிநிதி

ஷா ஆலம், மே 22-

கோலலங்காட் மாவட்டத்தில் உள்ள கேரித்தீவு தெற்குத் தோட்ட தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 37 மாணவர்களுக்கு மாநில அரசாங்கத்தின் பேருந்து கட்டண உதவிநிதியாக 11,000 வெள்ளி வழங்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு மாநில அரசாங்கம் ஆண்டுதோறும் வழங்கி வரும் பேருந்து கட்டணம் இவாண்டும் தொடர்வதாக ஆட்சிக் குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் தெரிவித்தார்.

“இத்திட்டத்தின் கீழ் கடந்தாண்டு 2,500 மாணவர்கள் பயனடைந்த வேளையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 3,547 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான நிதியின் கீழ் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அதே வேளையில், தோட்டத் தொழிலாளர்கள் அல்லது முன்னாள் தொழிலாளர்களுக்கான மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் உயர்க்கல்விக் கட்டணம் செலுத்த உதவதும் இந்த உதவித் திட்டத்தில் அடங்கும் என்று கண்பதி ராவ் விளக்கமளித்தார்.

இவை தவிர்த்து, தமிழ்ப்பள்ளிகளுக்கான யூபிஎஸ்ஆர் பயிற்சி பட்டறை நடத்துவதிலும் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :