NATIONAL

சமூக நல்லிணக்கச் சட்டத்தை ஆராய அரசு எண்ணம்

கோலாலம்பூர், மே 8-

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் மக்களின் நல்லிணக்கத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தகவல் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளோடு சமூக நல்லிணக்கச் சட்டத்தை மறு ஆய்வு செய்யவும் அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் அந்தச் சட்டத்தை தற்போது அமலாக்கம் செய்ய அரசாங்கம் எண்ணவில்லை என்று பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமது ஃபுவாட் ரஃபிக் கூறினார்.

“மாறாக, நல்லிணக்கத்தைப் பேண் மற்றொரு தரப்புக்கு அதிகாரம் வழங்கப்படலாம்” என்று மேலைவயில் அவர் தெரிவித்தார்.

பல்லின மக்கள் மத்தியில் நிலவும் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் தகவல் பரவலைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை குறித்து அறிய விரும்புவதாக செனட்டர் அஸ்மாக் ஹூசேன் கேட்ட கேள்விக்கு டாக்டர் ஃபுவாட் மேற்கண்ட விளக்கத்தை அளித்தார்.

 


Pengarang :