NATIONAL

சிறந்த விமான நிறுவனமாக ஏர் ஆசியா தேர்வு பெற்றது

கோலாலம்பூர், மே 1-

தென் கிழக்காசியாவில் அதிகளவிலான பயணிகளைக் கொண்ட விமான நிறுவனமாக ஏர் ஆசியா தேர்வு பெற்றது. அண்மையில் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.

2017ஆம் ஆண்டு 4.3 மில்லியன் பயணிகளை அக்குடியரசுக்கு கொண்டு சென்ற இந்த நிறுவனம் கடந்தாண்டில் 4.5 மில்லியன் பேரை கொண்டு சென்றது, இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4.1 விழுக்காடு அதிகமாகும் என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

அதே வேளையில், சிங்கப்பூருக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஜெட்ஸ்டார், கெத்தே பசிபிக் ஏர்வேஸ் மற்றும் லயன் குருப் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதில் மூன்றாவது நிறுவனமாக ஏர் ஆசியா திகழ்கிறது என்று அது தெரிவித்தது.

மலேசியா, இந்தோனேசிய, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு நாளொன்றுக்கு சுமார் 40 பயணங்களை மேற்கொள்வதாக அதன் சிங்கப்பூர் தலைமை செயல்முறை அதிகாரி லோகன் வேலாயுதம் தெரிவித்தார்,


Pengarang :