SELANGOR

சுபாங் ஜெயாவில் “ பார்க்பைபோன்” நடைமுறை அறிமுகம்!

சுபாங் ஜெயா, மே 6-

இங்குள்ள வாகன நிறுத்துமிடங்களில் விவேக செயலியைப் பயன்படுத்தும் ‘ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங்” (எஸ்எஸ்பி) மற்றும் ‘ பார்க்பைபோன்” ஆகிய நடைமுறைகளை சுபாங் ஜெயா நாடாளுமன்ற கழகம் அமல்படுத்தவிருக்கிறது.

சிலாங்கூர் ஸ்மார்ட் டிலிவரி யூனிட் ( எஸ்எஸ்டியு) மற்றும் கோடெல் பார்க்கிங் நிறுவன ஒத்துழைப்புடன் ஊராட்சி மன்றத்தின் பொறுப்பில் இருக்கும் 79,853 வாகன நிறுத்திமிடங்களில் இந்த விவேக செயலி பயன்படுத்தப்பட இருப்பதாக நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் தெரிவித்தார்.

இவற்றுள் 60 விழுக்காடு அல்லது 44,639 வாகன நிறுத்துமிடங்கள் வர்த்தகப் பகுதியில் உள்ளன. மேலும் 40 விழுக்காடு அல்லது 35,214 இடங்கள் தொழிற் பேட்டைகள் மற்றும் தொழிற்துறை பகுதிகளில் உள்ளன என்றார் அவர்.

இது நாள் வரையில், வர்த்தகப் பகுதியில் வாக நிறுத்துமிடங்களுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்பட்டு வந்துள்ளன. தற்போது விரிவாக்கம் கண்டுள்ள இப்பகுதியின் இதர வாகன நிறுத்துமிடங்களிலும் கட்டணம் வசூலிக்க பயனீட்டாளர்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய கட்டண முறையை அறிமுகப் படுத்துவது அவசியமாகும் என்றார் அவர்.


Pengarang :