SELANGOR

சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வீடுகளின் உரிமையாளர்களுக்கு வரிச் சலுகை – எம்பிபிஜே

பெட்டாலிங் ஜெயா, மே 24-

கரியமிலவாயு பயனீடு குறைந்த மாநகராக உருவாகும் இலக்கை அடையும் பொருட்டு இயற்கை சுற்றுச் சூழலுக்கு ஏற்ப வீடுகளைப் பேணும் உரிமையாளர்களை ஊக்குவிக்க பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் வீட்டு வரிகளுக்கு 100 விழுக்காடு கழிவு வழங்கவிருக்கிறது.

மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைக் குறைவாக பயனீடு செய்வதோடு திடக் கழிவுகளை முறையாக சுத்தம் செய்வதோடு பயணங்களுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு இந்த ஊக்குவிப்பு வழங்கப்படவிருப்பதாக துணை டத்தோ பண்டார் ஜோஹாரி அனுவார் கூறினார்.

இந்தச் சலுகைக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்ப பாரங்களை எம்பிபிஜே நியமனம் செய்துள்ள சுயேட்சை குழு மதிப்பிடும் என்றும் வெற்றி பெறும் விண்ணப்பதாரருக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
வெற்றி பெற்றவர்களுக்கான வருடாந்திர வரியை சம்பந்தப்பட்ட வீட்டில் அடுத்தாண்டு கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :