SELANGOR

செய்திகளை சீரிய முறையில் வெளியீடுவீர்! ஊடகங்களுக்கு மந்திரி பெசார் கோரிக்கை

ஷா ஆலம், மே 27-

மாநில அரசாங்கம் சரியான தடத்தில் நடைபோடுவதற்கு ஏதுவாக தாங்கள் வெளியிடும் செய்திகள் சீராகவும் பொறுப்புமிக்கவையாகவும் இருப்பதை ஊடகவியலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஊடகம் மற்றும் குறைகூறல்கள் ஆகியவற்றின் மீது மாநில அரசாங்கம் எப்போதும் திறந்த மனப்போக்கை கொண்டுள்ளது என்று மந்திரி பெசார் அமிரிடின் ஷாரி கூறினார்.
“அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த பதிலை அளிக்கும் சந்தர்ப்பத்தையும் அரசாங்கத்திற்கு ஊடகங்கள் வழங்குவது அவசியமாகும். இதுவே ஒரு சீரான அறிக்கையாக கருதப்படும். மாறாக, அது ஒரு வழி கருத்தாக மட்டும் இருத்தலாகாது” என்றார் அவர்.

முந்தைய ஆட்சியின் போது தணிக்கை செய்யப்பட்ட செய்திகளே வெளியிடப்பட்டன. இதன் காரணமாக அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்ட ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்காததே முந்தைய அரசாங்கம் செய்த தவறாகும் என்றும் அவர் சொன்னார்.
திறந்த மனப்போக்கு என்பது புதிய மலேசியாவின் கொள்கையாகும். நாடு வலுவாக இருப்பதற்கு சுதந்திரம் செழிப்பாக இருப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.


Pengarang :